2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தொங்கிச் ​செல்ல முடியாது’

Editorial   / 2018 ஜனவரி 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்   

டயகமவுக்கும்  தலவாக்கலைக்கும் இடையில்,  காலை 7 மணிக்கு இடம்பெறும் பஸ்சேவை மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால், பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனரென்று, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  

கடந்த சில காலமாக இந்தச் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதெனவும் தனியார் பஸ் ஒன்று மட்டுமே சேவையில் ஈடுபடுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

இதனால் டயகம, அக்கரப்பத்தனை, மன்ராசி, பசுமலை மற்றும் நாகசேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஒரே பஸ்ஸில் முண்டியடித்துக்கொண்டு பயணிப்பதாகவும் பஸ்ஸின் கதவுகளில் தொங்கிச் செல்லும் நிலையை மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனரென்றும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் மாணவர்கள் விபத்துகளை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

எனவே மாணவரின் நலன்கருதி, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் இரண்டு, தனியார் பஸ்கள் இரண்டை, காலை 7.30 மணிக்கு சேவையில் ஈடுபடுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்று, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  பாடசாலை நிறைவு வேளையின்போதும் மேலதிக பஸ் சேவையை ஏற்படுத்தித் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .