2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றீனார்களா?’

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், டி.சந்ரூ

“தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குவதாக வாக்குறுதியளித்தவர்கள், அதனை நிறைவேற்றீனார்களா?” என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில், நுவரெலியா மாவட்டத்தில் “தாமரை மொட்டு” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம், நுவரெலியா நகரில் நேற்று முன்தினம் (03) மாலை நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அஙகு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

“நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில், நுவரெலியாவையும் ஏலத்தில் விற்க ஆயத்தப்படுகின்றனர்.

“தற்போது எல்லா சந்தர்பங்களிலும் குடும்ப அரசியல் என்று என்னைத் தூற்றுகின்றனர், ஆனால், தற்போதைய ஜனாதிபதிக்கு, குடும்ப அரசியல் இல்லாவிட்டாலும், தனியான ஒருவகை குடும்ப ஆட்சி உள்ளது.

“பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை, வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதே எனது கொள்கை.

“நாடு, என்னால் அபிவிருத்தி கண்டுள்ளது. ஆகையால், எம்மோடு கைகோர்த்து, நாட்டின் அபிவிருத்தியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்வோம்” என்றார்.

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ் உட்பட இக்கூட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .