2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக கையெழுத்து வேட்டை

Editorial   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரியும் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், மலையக இளைஞர்கள் அமைப்பு, கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மலையக இந்து குருமார்கள் ஒன்றியம், மலையக இளைஞர்களை இணைத்து, கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக டிக்கோயா, இன்வெரி தோட்டத்தில், கையெழுத்து வேட்டை நேற்று (12) ஆரம்பிக்கப்பட்டது. 

மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும் தோட்டங்களிலும் கையெழுத்துகள் பெறப்படவுள்ளதாக, ஏற்பாட்டுக் குழுத் தெரிவித்துள்ளது. 

 கையெழுத்துகள் அடங்கிய மகஜரானது, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .