2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்ட நிர்வாகத்தின் ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து, வட்டவளை பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெசிபன் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்தின் கொழுந்து மடுவத்துக்கு முன்பாக, நேற்று (9) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

தோட்ட உதவி அதிகாரி, தம்மை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தமது கோரிக்கையை தோட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மறுப்பதால், தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.   

தற்போது தேயிலை மலைகளில், கொழுந்து வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளதால், ஒரு நாள் சம்பளத்துக்கு 18 கிலோகிராம் கொழுந்தைப் பறிக்குமாறு, தோட்ட நிர்வாகம் வற்புறுத்தி வருவதாகவும் 18 கிலோகிராம் கொழுந்தைப் பறித்தால் மட்டுமே, முழுநாள் சம்பளத்தை வழங்க முடியும் என்று, தோட்ட நிர்வாகம் தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் காடாகி உள்ளதால், தாம் பாரிய உயிரச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே தொழில்புரிவதாகவும் எனவே, தாம் எதிர்கொள்ளும் இத்தகையப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியே, இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.  

மேலும் தோட்ட உதவி அதிகாரியை வெளியேற்றுவதற்கு, தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 160க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .