2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நன்னீர் மீன்குஞ்சுகள் விடுவிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

தோட்டத் தொழிலாளர்களின் போசணை மட்டத்தை அதிகரிக்கும் நோக்கிலும் சுயத்தொழில் ஊக்குவிப்பு முயற்சியாக, பெருந்தோட்டப் பகுதிகளில், நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகாரச் சபையின் ஊடாக, நீர்த்தேக்கங்களுக்கு மீன்குஞ்சுகள் விடுவிக்கும் வேலைத்திட்டம், மலையகப் பகுதிகளில் தற்போது, பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைவாக, ஹட்டன் - ஸ்டெடன், பன்மூர் தோட்டங்களிலுள்ள குளங்களில், 24,000 மீன்குஞ்சுகள், நேற்று (06) விடுவிக்கப்பட்டுள்ளன.

ஜயன்ட் காப்ட், புளு திலாபி ஆகிய இன மீன்குஞ்சுகளே, இவ்வாறு குளங்களில் விடுவிக்கப்பட்டுள்ளன என, தேசிய நீர்வளங்கள் அதிகாரச் சபையின் நுவரெலியா கிளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த மீனினமானது, ஒரு வருடத்துக்குள் 1 1/2 முதல் 2 கிலோகிராம் வரை வளர்ச்சியடையும் என்றும், சுமார் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட மீன்கள் பல்கிப்பெருகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X