2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நன்பேரியல் தோட்ட நுழைவுத் தடை நீங்கும்

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஜித்லால் சாந்தஉதய  

இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய, பலாங்கொடை- நன்பேரியல் தேயிலைத் ​தோட்ட நிறுவனத்தால் மூடப்பட்டுள்ள நன்பேரியல் ஊடாக உலகமுடிவு வரை செல்லும் வீதியின் நுழைவுத் தடையை, இரண்டொரு தினங்களில் அகற்றுவதாக இம்புல்பே பிரதேச சபையின் தவிசாளர் ஸ்ரீ லால் செனரத் தெரிவித்துள்ளார்.  

அத்துடன் நன்பேரியல் தோட்டத்தின் ஊடாகவே, நெத்ரக் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான வீதி காணப்படுவதாகவும் குறித்த வீதியானது, இம்புல்பே பிரதேச சபையால் பராமரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், நன்பேரியல் தோட்ட நிர்வாகம் பிரதான நுழைவாயிலை மூடிவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

பலாங்கொடையிலிருந்து உலகமுடிவுக்குச் செல்பவர்களுக்கானக் குறுக்கு வீதியும், நெத்ரக் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான வீதியும் நன்பேரியல் தோட்டத்தின் ஊடாகவே செல்வதுடன், குறித்தத் தோட்ட முகாமையாளரின் அனுமதியின்றி இந்த வீதியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பில் கடந்தவாரம் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட காரணங்களுக்கு அமைய, உடனடியாக குறித்த நுழைவாயில் தடையை அகற்றி, பொதுமக்களுக்குத் தடையின்றி குறித்த வீதியைப் பயன்படுத்த சந்தர்ப்பத்தை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.  

அத்துடன், இந்தச் செயற்பாட்டால் சுற்றுலாத்துறையினரும் இந்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகவும் இந்த வீதி நன்பேரியல் தோட்டத்தின் ஊடாகச் சென்றாலும் வீதியைப் பராமரிப்பது அரசாங்கம்தான் என்றும் இம்புல்பே பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .