2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நல்லடக்க பூமி இன்மையால் சடலங்களை அடக்கம் செய்வதில் அவலம்

பா.திருஞானம்   / 2020 ஜனவரி 07 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கொத்மலை, லபுக்க​லை தோட்டம் கொண்டகலை பிரிவு மக்களுக்கு, நல்லடக்க பூமியொன்று இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், இந்த மக்களுக்கு இருந்த நல்லடக்க பூமி, முறையாக இருந்த போதிலும், பிற்காலத்தில், கண்டி - நுவரெலியா பிரதான பாதை புனரமைப்பின் போது, குறித்த மயானம் மண்போட்டு மூடப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கல்லறைகள் அனைத்தும் சிதைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இதற்கு பொறுத்தமான ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்வறத்கு, தோட்ட மக்களும் அரசியல் பிரமுகர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று, தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லடக்கத்துக்கான பூமியொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு, தோட்ட நிர்வாகம் பல வருடங்களாக இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது காணப்படும் நல்லடக்க பூமி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமானதாக இருப்பதால், தோட்டங்களில் இறப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வதில் பாரிய சிக்கல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, தோட்ட நிர்வாகம், இது தொடர்பில் கவனம் செலுத்தி, தோட்ட மக்களுக்கு நல்லடக்க பூமியொன்றைப் பெற்றுக்கொடுக்க வழிசமைக்க வேண்டும் என்று, தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X