2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’நிவாரணம் வழங்குவதில் கரிசனை இல்லை’

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

மலையகத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது மலையகத்தில் பெய்துவரும் அடைமழை மற்றும் கடுங்காற்று காரணமாக பெருந்தோட்ட மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

"வீடுகளின் கூரைகள் காற்றில் அல்லுண்டு போயுள்ளன. பல பாதைகள் சேதமடைந்துள்ளன. மண்சரிவின் காரணமாக பல குடியிருப்புகளில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள போதும் எவ்விதமான நிவாரண வேலைகளும் முன்னெடுக்கப்படவில்லை." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த விடயம் மலையக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நோக்குவதையே காட்டுவதாகவும், இதே நேரத்தில் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் மூலமாக விநியோகிக்கப்பட்ட கூரை தகரங்களை சில தொழிற்சங்கங்களின் தோட்டத் தலைவர்கள் வைத்துக்கொண்டு தொழிற்சங்க அங்கத்துவ அதிகரிப்புக்காக பயன்படுத்தி வருகின்றனர்." எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

"கடந்த காலங்களில் பெருந்தோட்ட மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட போது மனிதவள நிதியத்தின் மூலம் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த நிறுவனம் முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறது. மலையகத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும்." எனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .