2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிவ்வெளிகமவில் மண்சரிவு அபாயம்; நிரந்தரமாக வெளியேறுமாறு 5 குடும்பங்களுக்கும் பணிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட், நிவ்வெளிகம பகுதியில், நிலம் தாழிறங்கும் அபாயம் காரணமாக, செவ்வாய்க்கிழமை இரவு, தற்காலிகமாக வெளியேற்றப்பட்ட ஐந்து குடும்பங்களையும், நிரந்தமராக வெளியேறுமாறு, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் பணித்துள்ளனர்.

மேற்படி பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும், வீடுகளின் சுவர்கள் வெடித்து, வீடுகள் அனைத்தும் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்குள் விழும் அபாயமுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிவ்வெளிகம பகுதியிலுள்ள ஐந்து வீடுகளின் சுவர்களில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு மற்றும் நிலம் தாழிறங்கும் அபாயம் காரணமாக, ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் வெளியேற்றப்பட்டதுடன், இவர்கள் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேற்படிப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னரே, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள், இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர். இதேவேளை, நிவ்வெலிகம பிரதேச மக்களை, பாதுகாப்பான இடமொன்றில் குடியேற்றுவது அவசியம் என்று, அம்பகமுவ கோரள பிரதேசத்தின் பணிப்பாளர் டி.பி.சுமணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .