2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நுவரெலியா கிளை சோம்பேறியானது

Editorial   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி ஊழியர் நலன்புரி சங்கத்தின் நுவரெலியா மாவட்டத்துக்கான கிளைக் காரியாலயத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தச் சங்கத்தின் கிளைக் காரியாலயம் கண்டியிலும் இயங்குகின்றது.  

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, கண்டிக்கே சென்றுவந்தனர்.  எனினும், நுவரெலியா மாவட்ட ஆசிரியர்களின் வேண்டுகோளின் அடிப்படையில், கடந்த ஒருவருடத்துக்கு முன்னர், நுவரெலியாவிலும் ஒரு கிளை உருவாக்கப்பட்டது.   

எனினும், ஆசிரியர்களின் நலன்களில் அந்தக் கிளைக் காரியாலயம் எவ்விதமான அக்கறையும் உடனுக்குடன் காட்டுவதில்லையென புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நுவரெலியா மாவட்டத்தில், தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். எனினும், அந்தக் காரியாலயத்தில், தமிழ் மொழி மூலம் சேவையாற்றுவதற்கு ஒருவரே இருக்கின்றார்.   

ஆசிரியர்களுக்கு, ஒரு மணி நேரத்துக்குள் பூர்த்திசெய்து அனுமதிபெற்று கொடுக்கவேண்டிய கடன் தொடர்பிலான ஆவணங்களைப் பெறுவதற்கு, ஒருநாள் காத்திருக்கவேண்டியுள்ளது என்றும்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.   இந்த விவகாரம் குறித்து, அந்தச் சங்கக் காரியாலயத்துடன் தொடர்புகொள்வதற்கு முயற்சித்த போதிலும் அம்மு​யற்சி கைகூடவில்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X