2024 மார்ச் 28, வியாழக்கிழமை

“நூரளையை சேவல் வெல்லும்”

Editorial   / 2018 ஜனவரி 30 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

“எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாகைச் சூடும்” என்று தெரிவித்துள்ள மத்திய மாகாண விவசாய மற்றும் இந்துக் கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன், “மலையகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமைந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக, கொட்டகலை பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கொட்டகலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

“இந்தத் தேர்தலில் மலையக மக்களின் முழுமையான ஆதரவு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூக்குக் கிடைக்கும். மக்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செயற்பட்டு வருவதை, தேர்தல் பிரசார களத்தில் மக்களைச் சந்திக்கும் போது அறிய முடிந்தது.

“எனவே, மலையக மக்களுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைத்துக் கொடுக்கும் என்பதை, நான் உறுதியாகக் கூறுகின்றேன். தேர்தல் காலம் நெருங்கி வருவதால் என்றும் இல்லாதவாறு பல போட்டிகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை, எமக்கு ஏற்பட்டுள்ளதை மக்கள் அறிவார்கள்.

“மக்கள் மத்தியில் குழப்பங்களையும் மோதல்களையும் ஏற்படுத்தி, மக்களின் கட்டுக்கோப்பை திசை திருப்ப சிலர் முனைவார்கள். இதனால் மக்கள் மிகத் தெளிவாகவும் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X