2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புலமைப் பரிசில் முன்னோடி பரீட்சை

Kogilavani   / 2018 ஜூன் 08 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்   

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில், வருடாந்தம் நடைபெறும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சை, எதிர்வரும் 23ஆம் திகதியன்று காலை 8 மணிக்கு, நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.  

இந்தப் பரீட்சைக்கு, நாடளாவிய ரீதியில் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளனரெனத் தெரிவித்த மன்றத்தின் தலைவர் எம்.சிவகுமார், இதற்கென சுமார் 7 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.   

இந்தப் பரீட்சையை நடத்துவதற்கு, கல்வி அமைச்சு மற்றும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணக் கல்வியமைச்சுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களும், இதற்கான முன் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.  

இதன்போது, முதலாம் இரண்டாம் பகுதிகளைக் கொண்ட வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட உள்ளதெனவும் பரீட்சை நடைபெறும் தினங்கங்களில், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பிரதிநிதிகள், பரீட்சை நிலையங்களுக்கு வருகை தரவுள்ளனரெனவும், அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X