2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மதுபான நிலையங்களை ஞாயிறன்று மூடவும்’

Editorial   / 2018 ஜனவரி 12 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வரஜா

“தைப்பொங்கல் பண்டிகையானது, ஆன்மீக ரீதியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த திருநாளாகும். அந்தத் தினத்தன்று, மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிடுவதற்கு கட்டளையிடவேண்டும்” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் கோரியுள்ளார்.   

அந்தக் கடிதத்தில் மேலும் கோரப்பட்டுள்ளதாவது,   

“எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) தைப்பொங்கல் என்பதால், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.   

“தைபொங்கல் இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகள் ஒன்றாகும். களியாட்ட பண்டிகையாக, தைப்பொங்கலை எவரும் கொண்டாடுவதில்லை.   

“சூரிய பகவானுக்கு நன்றி கூறுவதுடன், ஆலயங்களுக்குச் சென்று பூஜை, வழிபாடுகளில் ஈடுபட வேண்டுமென்பதுடன் அன்றைய தினத்தில், தான தர்மங்களை செய்வதே, இந்தப் பொங்கல் பண்டிகையின் நோக்கமாகும்.   

“குறிப்பாக இறைச்சி மற்றும் மீன் கடைகளையும் அன்றைய தினம் மூட வேண்டும். அடுத்து வரும் வருடங்களில் இதனையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.   

இந்தக் கடிதத்தின் பிரதிகள், பதுளை மாவட்ட அரச அதிபர் மற்றும் மாகாண கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .