2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மஸ்கெலியா வைத்தியசாலையை எங்களுக்குத் தாருங்கள்’

Gavitha   / 2021 ஜனவரி 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையை, கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையிலுள்ள 3,4,5,6 ஆகிய விடுதிளில் இருந்த கட்டில்கள் அனைத்தும், பொகவந்தலாவ கொரோனா சிகிச்சை நிலையத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலைக்கு, வாராந்தம் 300 பேர் கிளினிக் வருவதாகவும் 4 நகரங்கள், 21 தோட்டங்களைச் சேர்ந்த 79 பிரிவுகளிலுள்ள 2 இலட்சம் தொழிலாளர்களும் இந்த வைத்தியசாலைக்கே வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சிவனொளிபாதலை பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர சிகிச்சைக்கு இந்த வைத்தியசாலைக்கே வரவேண்டியுள்ளது என்றும் எனினும் இந்த வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையில், ஏற்கெனவே பல்வேறு குறைபாடுகள் காணப்படும் நிலையில், அவற்றை நிவர்த்தி செய்து தருமாறு, பல அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இந்த வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மக்கள் நலனுக்காக இந்த வைத்தியசாலையைப் பயன்படுத்துமாறும், பெருந்தோட்டப் பகுதியில் மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றை, கொரோனா சிகிச்சை நிலையத்துக்காக பயன்படுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .