2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாத்தளை மாவட்டத்தை ’பின்தங்கிய பிரதேசமாக அறிவிக்குக’

Editorial   / 2018 ஜூன் 08 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

மாத்தளை மாவட்டத்தை, பின்தங்கிய பிரதேசமாக அறிவிக்கவேண்டும் என, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், நேற்று முன்தினம் (06) இடம்பெற்ற வாய்மூலக்கேள்வி நேரத்தின் போது, கல்விய அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது மேலும் உரையாற்றி அவர்,

அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களைப் போலவே, மாத்தளை மாவட்டத்திலும் யானைகள் பிரச்சினை உள்ளிட்ட மண்சரி அபாயங்கள் அதிகம் காணப்படுவதாகவும் எனவே, அதை பின்தங்கிய பிரதேசமாக அறிவிக்கவேண்டும் என்றும் கூறினார்.

ஏனெனில் மாத்தளை மாவட்டத்திலிருந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் பல்கலைக்கழங்களுக்கு தோற்றும் மாணவர்கள் வெட்டுப்புள்ளி விடயத்தில் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் எனவே, மாத்தளை மாவட்டம் பின்தங்கிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டால், அவர்களுக்கும் வெட்டுப்புள்ளி விடயத்தில் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசம், இது பற்றி அவதானம் செலுத்துவதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .