2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’முட்தெங்குக்குத் தடை வேண்டும்’

Editorial   / 2018 ஜூன் 08 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

முட்தெங்குப் பயிர்ச்செய்கையால் மக்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து, அந்தப் பயிர்ச்செய்கைக்கு இலங்கையில் தடைவிதிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரமதர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரோடு, சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் முன்வர வேண்டுமென, கண்டி மனித அபிவிருத்தித் தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சர்வதேச விவசாயத் தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான பி.பி.சிவபிரகாசம் வலியுறுத்தியுள்ளார்.

எண்ணெய்ப் பனை, செம்பனை போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் முட்தெங்குப் பயிர்ச்செய்கையின் பாதிப்புகள் தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு, உத்தியோகபூர்வ அறிக்கைகளை சமர்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கேகாலை மாவட்டத்தில், இறப்பர் பயிரிடப்பட்டுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில், மாற்றுப் பயிர்ச்செய்கை என்ற வகையில், அங்கு முட்தெங்குப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தெரிவித்த அவர், தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.

“பாக்கு மரம், தென்னங்கன்று, பெறுமதி மிக்க பழ மரங்கள் என தொழிலாளர்களிடம் கூறியவாறு, தொழிலாளர்களைப் பணம் கொடுத்து தம்வசம் இழுத்து கொண்டுள்ள தோட்ட நிர்வாக அதிகரிகள், இரவு, பகல் பார்க்காமல், தொழிலாளர்களுக்கு அறிமுகமே இல்லாத முட்தெங்குக் கன்றுகளை நாட்டி வருகிறார்கள்.

“தேயிலை, இறப்பர், தெங்கு ஆகிய பயிர்களை போல் அல்லாது, முட்தெங்குப் பயிர்ச்செய்கை மூலம் சுற்றுப்புற சூழல், தொழில் வாய்ப்புகள், உற்பத்திகள் போன்றவற்றில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது..

“இதன் காரணமாகவே முட்தெங்கு உற்பத்தி, பாம் எண்ணெய் தயாரித்தல் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன. இலங்கையில் மனித அபிவிருத்தித் தாபனமும், இந்தப் பயிர்ச்செய்கை தொடர்பில் ஆய்வுசெய்து தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வந்துள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .