2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மொரகெட்டிய மகா வித்தியாலயம் அபிவிருத்தி

Editorial   / 2018 ஜூன் 08 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்  திட்டத்தின் கீழ்,  எம்பிலிபிட்டிய மொரகெட்டிய மகா வித்தியாலயம் முழுமையாக அபிவிருத்திச் செய்யப்பட உள்ளது.

இதனடிப்படையில், மேற்படி வித்தியாலத்துக்கு 500 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று மாடி கட்டிடடத்தொகுதி மற்றும் விளையாட்டு மைதானம் என்பன நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

இப்பாடசாலையின் அமைக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு,  நேற்று(7) நடைபெற்றது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய. மாகாண கல்வி பணிப்பாளர் சேபால குறுப்பு ஆராச்சி உட்பட கல்வி பணிப்பாளர்கள், கோட்ட கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .