2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

“யானையை விரைவில் காட்டுக்குள் அனுப்புங்கள்”

Editorial   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பைத் திண்டு வளர்ந்த யானை வீட்டுக்குள் இருக்கின்றது. அதனை விரைவில் காட்டுக்குள் அனுப்பி விடுங்கள் என்றுத் தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான்,  மாற்றுக் கட்சியினருக்குக் கூட்டம் சேர வேண்டும் என்றால் எனது பெயரையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பெயரையும் அவர்கள் உச்சரித்தே ஆக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குக் கூட்டம் சேரும்.  எனது பெயரை உச்சரித்து சொல்லப்படும் வார்த்தைகளுக்கே, அந்தக் கூட்டம் வருகிறது என்றும் தெரிவித்தார்.

பூண்டுலோயா நகரில், நேற்று முன்தினம் மாலை (6) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்  மேலும் கூறுகையில்,

“தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைப் பணமான 88,500 ரூபாயைக்கொண்டு, யானைக்கு வாழை மட்டைகளை வாங்கிக் கொடுத்தீர்கள். வாழை மட்டைகளை யானை நன்றாகத் தின்றது. தொழிலாளர்களின் திறன் விருத்திப் பணமான 140 ரூபாயைக்கொண்டு, யானை ஆடை இல்லாமல் இருக்கின்றது என்றுகூறி, மானத்தைக் காக்க துண்டுத் துணியையும் வாங்கிக் கொடுத்தீர்கள். இன்று வீட்டுக்குள்ளே யானை சுகமாக இருக்கின்றது.

“இவை  அனைத்தும் செய்த நீங்கள் உருப்படியாக இருக்கின்றீர்களா? நிம்மதியாக வாழ்கின்றீர்களா என இதன்போது அவர் கேள்வியெழுப்பினார்.

“என்னை நேசிப்பவர்களின் பெயரை நான் உச்சரிப்பேன். குடுகாரர்களின் பெயரை உச்சரிக்க மாட்டேன்.   எனது பெயரை நான் கூறுவதைவிட மாற்றுக் கட்சியினர் தினமும் மக்கள் மத்தியில் கூறி வருகின்றனர். எதிர்காலத்தில் எனது பெயரை பச்சையும் குத்திக்கொள்வார்கள்.

“சிலர் எமது ஸ்தாபன பாடசாலையில் அரசியல் கற்றவர்கள். வளர்த்தக் கடா மார்பில் பாய்வதுப் போல், நமது ஸ்தாபனத்துக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வந்தவர்கள் அடிப்பட்டுச் சென்று விட்டார்கள். இன்று அவர்கள் சென்ற இடத்திலும் அடிப்பட்டே வாழ்கின்றனர். ஆனால் ஒரு காலமும் இ.தொ.கா என்ற புனிதமான ஸ்தாபனம், அழிந்துப் போய்விடாது. அது வெட்ட வெட்டத் துளிர்க்கும் ஸ்தாபனமாகும்” என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X