2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ரூ.1,000ஐ பெற்றுக்கொடுக்க வேண்டும்’

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

புதிய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள், வாக்குறுதி வழங்கியதைபோன்று மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மேற்படித் தொழிற்சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், தோட்டத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், ஹட்டன் இந்திரா விருந்தகத்தில், இன்று(8) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

“மலையகத்தில் தற்போது அமைச்சர்கள், மக்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை பெற்றுத்தருவதாக, பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். ஆனால், கடந்த அரசாங்கத்தின் போது, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பத்தாயிரம் வீடுகள் மாத்திரமே உள்ளன” என்றார்.

“எனவே அந்த பத்தாயிரம் வீடுகளையும் முழு மலையகத்துக்கும் வழங்க முடியாது. இந்த மாதம் தொழிற்சங்கத்துக்கான அங்கத்தவர்களை அதிகரித்துக் கொள்ளும் மாதம் என்பதால், பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .