2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ’சம்பள அதிகரிப்பு வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மலையகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சுப்ரமணியம், இவ்விடயம் தொடர்பில், கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையகத் தொழிலாளர் முன்னணியின் உத்தியோகத்தர்களுக்கான கூட்டம், ஹட்டனிலுள்ள முன்னணியின் காரியாலத்தில், நேற்று (9) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார். இங்குத் தொடர்ந்துரையாற்றிய அவர்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, வாழ்க்கைப் புள்ளிச் செலவு நிறுத்தப்படாமல் இருந்திருந்தால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,500 ரூபாய்க்கு மேல் இருந்திருக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளும், வாழ்க்கைச் செலவு முறையை இல்லாதொலித்ததனால், தொழிலாளர்கள் தாம் பெற வேண்டிய வேண்டிய முழுமையான, நியாயமான சம்பளத்தை இழந்துள்ளனர் என்றும் அவர் சாடினார்.

பல்வேறு வகையிலும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் செலவு குறைக்கப்பட்டாலும்கூட, கம்பனிகள் நட்டத்தில் இயங்கி வருவதாகவே, கூட்டுஒப்பந்த பேச்சுக் காலத்தில் தெரிவிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்விடயத்தில், அரசாங்கமும் பாராமுகமாகவே செயற்படுவதாகவும் சாடினார்.

தேயிலையின் உற்பத்தியின் விலை உயர்ந்துக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், கணிசமான அளவு சம்பள உயர்வை மக்கள் எதிர்பார்தாகத் தெரிவித்த அவர், எனவே, கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .