2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் மாணவி பலி

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

 

நுவரெலியாவில் இடம்பெற்ற “செயல்பட்டு மகிழ்வோம்” எனும் நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிய 9 வயது மாணவி ஒருவர், டயகம நகரத்தில் மரக்கறி ஏற்றும் லொறி ஒன்றில் மோதுண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து, நேற்று  (12) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாக, டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி, டயகம கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலையில் கல்வி கற்ற என்டன் ருக்ஸி (வயது 9) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவி நுவரெலியாவில் இடம்பெற்ற செயல்பட்டு மகிழ்வோம் என்ற நிகழ்வில் கலந்து கொண்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது, குறித்த மாணவி வீதியின் மருங்கில் சென்ற பொழுது டயகம ஈஸ்ட் பகுதியிலிருந்து டயகம நகரத்துக்கு வந்த மரக்கறி லொறி ஒன்று, தனது கட்டுப்பாட்டை மீறி மாணவியின் மீது மோதியது.

இதில் படுகாயங்களுக்குள்ளான மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்துள்ள அதேவேளை, லொறியையும் கைப்பற்றியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை, டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .