2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வீதி விபத்துகளால் நாளொன்றுக்கு எட்டு பேர் பலி

Editorial   / 2018 மே 17 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ, அஜித்லால் உதயசாந்த

இலங்கையில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துகளால், நாளொன்றுக்கு எட்டு (8) பேர் பலியாவதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்தார்.

மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் வீதம், வீதி விபத்துகளால் உயிரிழிக்கின்றனரெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீதி விபத்துகளால் ஏற்படும் மரணங்களுக்கு அப்பால், தற்காலிகமாக அல்லது நிரந்தமாக அவயவங்கள் இழப்புக்கு உள்ளான பலரது குடும்பங்கள், பாதிப்பை எதிர்நோக்கி உள்ளனவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட வீதி விபத்துகளால், 3,100 பேர் பலியானதுடன் 4,320 பேர் அங்கவீனர்களாகியுள்ளனர்.

“வாகனங்களை அதிக வேகத்துடன் செலுத்துதல், வீதிச் சட்டங்களை மீறுதல், போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்ட பின்னர் வாகனங்களைச் செலுத்துதல், அலைபேசியில் உரையாடிய வண்ணம் வாகனங்களைச் செலுத்துதல், வாகனங்களை செலுத்தும்போது வெற்றிலை உண்ணுதல் போன்ற இன்னும் பல காரணங்களே, வீதி விபத்துகள் ஏற்படக் காரணமாகியுள்ளன” என்றும் கோட்டாகொட கூறினார்.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டப் பொலிஸ் நிலையங்களில் பெறப்பட்ட தகவல்களுக்கமைய, சப்ரகமுவ மாகாணத்திலேயே விபத்துகள் அதிகரித்துள்ளனவெனத் தெரியவந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், வீதி விபத்துகளைத் தடுப்பதற்காக, வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, விபத்துகளைக் குறைப்பது தொடர்பான அலுவலகம் ஒன்று, சப்ரகமுவா மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X