2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘ஹனுமான் பாதங்களின் வரலாற்றைக் காணவில்லை’

Editorial   / 2018 ஜனவரி 29 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா, காட்மோர் பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகள் குறித்த எந்தவொரு தொல்பொருள் ஆய்வுச் சான்றுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லயென, தொ​ல்பொருட்கலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.   

இவ்விடம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை, தன்னிடம் கிடைக்கப்பெற்று உள்ளதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவல தெரிவித்தார்.  

இவ்வாறான பாதச்சுவடுகள், குறித்த கற்பாறையின் அனைத்து இடங்களிலும் காணப்படுவதாகவும் மேற்படி இரு பாதச்சுவடுகள், அருகருகே காணப்படுவதே அவற்றின் விசேட அம்சமெனவும், குறித்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட தொல்பொருட்கலைத் திணைக்கள அதிகாரிகள், தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.   

எவ்வாறாயினும், குறித்த பாதச் சுவடுகள் காணப்படும் இடத்துக்கு அண்மித்த பகுதிகளிலிருந்து, எவ்வித தொல்பொருட் சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அவ்வதிகாரிகள், தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.   

எவ்வாறாயினும், குறித்த பாதச் சுவடுகள் தொடர்பில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.  

மஸ்கெலியா, காட்மோர் பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை, ஹனுமான் கடவுளின் பாதச்சுவடுகள் எனத் தெரிவித்து, பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .