2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுவன் மரணம்: தேர்திருவிழா நிறுத்தம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் அகால மரணம் அடைந்ததை தொடர்ந்து ஹட்டன் டிக்கோயா தெற்கு வனராஜா தோட்டத்தில் நடைபெறவிருந்த வருடாந்த தேர் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது என ஹட்டன் நகர பொலிஸார் தெரிவித்தனர்.

கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ரகு தினேஸ்குமார் என்ற (17 வயது) சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

டிக்கோயா தெற்கு வனராஜா தோட்டத்தின் வருடாந்த தேர் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (11) அன்று முகூர்த்தக்கால் ஊன்றலுடன் ஆரம்பமாகியிருந்தது.

இவ்வேளையில் ஆலயத்தில் பந்தல் அலங்காரம் செய்து கொண்டிருந்தபோது, ஆலய வாசலுக்கு வாழைமரம் கட்டுவதற்காக வாழை மரமொன்றை வெட்டி தூக்கிக்கொண்டு வந்த சிறுவன் இடைநடுவில் மயங்கி விழ்ந்துள்ளான்.

இந்நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட இச்சிறுவன் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தான்.

இந்நிலையில் பாரம் தூக்கியதாலேயே இவ்வாறு ஊயிரிழந்திருப்பதாக பிரேத அறிக்கையில் தெரிவித்திருப்பதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன் சடலத்தை உறவினர்களிடம் சனிக்கிழமை (12) ஒப்படைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X