2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்

Princiya Dixci   / 2016 மார்ச் 24 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை நாடுபூராகவும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாகப் பிரதானப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துரைப் பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்துள்ளார்.  

கொழும்பு சுகாதார ஆய்வுகூட கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

நாடளாவிய ரீதயில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே இத்திட்டம் அமுலாக்கப்படவுள்ளது. 

இவ் வாரத்தை முன்னிட்டு சுகாதார உயர் அதிகாரிகளும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் டெங்கு நுளம்பு வளரும் பிரதேசத்தினை இனங்காண வரும் போது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதோடு, இத்திட்டத்தினை இவ்வாரத்துடன் விடாது தொடர்ந்து வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருந்து டெங்கு நோயிலிருந்து நம்மையும் நமது பிள்ளைகளையும் காப்பாற்ற முன்வருமாறு பிரதியமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால உட்பட முப்படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .