2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாள் ஒன்றுக்கு 66 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 27 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.இஸட். ஷாஜஹான்

எமது நாட்டில், நாள் ஒன்றுக்கு 66 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுகின்றனர். கம்பஹா மாவட்டத்தில் கடந்த வருடத்தைவிட இந்த வருடத்தில் டெங்கினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. இந்த மாத்தில் மாத்திரம் சீதுவை சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்துக்குட்பட்ட பிரிவில் 60 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதான சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் ரசிக லியனகே தெரிவித்தார்.

கட்டானை கோட்ட பாடசாலை அதிபர்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கில் 'டெங்கில்லாத பாடசாலை' என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (26) கட்டுநாயக்க வலானை லக்ஷ்மி வித்தியாலய பிரதான மண்டபத்தில் கட்டானை கோட்டப் பணிப்பாளர் தலைமையில் நடைப்பெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்,

டெங்கு நுளம்புகளின் முட்டைகள் ஒரு வருட காலம் அழியாமல் இருக்கக் கூடியது. இதன் காரணமாக டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் தொடர்பாகவும், அதனை அழிப்பது தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்த வேண்டும். டெங்கினால் உயிரிழப்பு ஏற்படுவதன் காரணமாக பல குடும்பங்களின் குடும்ப கட்டமைப்பு சீர்குழைந்துள்ளதை அவதானித்துள்ளோம். ஒருவரின் மரணம் குடும்பத்தையே பாதிக்கிறது.

இதுவரையில் 162 பேர் சீதுவை சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்துக்குட்பட்ட பிரிவில் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை அதிபர்கள் டெங்கு ஒழிப்பு தொடர்பாக பூரண பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .