2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

Princiya Dixci   / 2017 மே 18 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் புதன்கிழமை  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அரச சேவைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு,  இலங்கை மனித உரமைகள் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இந்த ஆணைக்குழுக்களுக்கான புதிய முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

மேலும் ஆணைக்குழுக்களின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கப்பட்டது. இந்த அனைத்து ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளையும் முறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .