2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாகாணசபை உறுப்பினருக்கு எதிரான வழக்கு; 10,000 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்க இணக்கம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாரூக் தாஜுதீன்)

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மத்திய நிலையத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளரையும், அவரது சாரதியையும், தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் மேல் மாகாண உறுப்பினருக்கும் மேலும் இருவருக்கும் எதிராக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபாவினை நட்ட ஈடாக வழங்கும் படி கூறி நீதவானால் இவ்வழக்கு சமாதானமாக தீர்த்துவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் மேல் மாகாணசபை உருப்பினர் சாகுல் ஹமீட், மொஹமட் அஷ்ரப் ஹுசைன் அவரது சாரதி சுசித நிரஞ்ச ஆகியோரை தனது ஆதரவாளர்கள் இருவருடன் வந்து தாக்கியதாக மாளிகாவத்தை பொலிஸாரினால் வழக்குத் தொடரப்பட்டது.

மாளிகாவத்தை முஸ்லிம் மன்றத்தின் நிதியை கையாடியாக பத்திரிகைகளுக்கு தகவல் கொடுத்ததற்காகவே குற்றஞ் சாட்டப்பட்டவர் தாக்குதலை மேற்கொண்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டிருந்தது.

தனது தீர்ப்பை வழங்கும் முன் மேலதிக நீதவான் இந்த வழக்கை சமாதானமாக தீர்க்க விருப்பமா என கேட்டப்போது இரு சாரரும் அதற்கு சம்மதித்ததால் வழக்கை சமாதானமாக தீர்த்து வைத்தார். நட்டஈடு 10000 ரூபா வழங்கபட்டதா என அவதானிப்பதற்காக ஒக்டோபர் 05 ஆம் திகதி இந்த விடயம் ஆராயப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .