2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சார்க் நாடுகளின் 16ஆவது வர்த்தக சம்மேளன மாநாடு கொழும்பில்

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                                              (இர்ஷாத் ரஹ்மத்துல்லா )

சார்க் நாடுகளின் 16ஆவது  வர்த்தக சம்மேளன மாநாடு ஸ்திரத்தன்மை வாய்ந்த பொருளாதார ஒருங்கிணைப்பும், பிராந்திய தனியார் வர்த்தக துறைகளின் பங்களிப்பும் எனும் தலைப்பில் கொழும்பு சினமன் கிரன்ட் ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.

இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தக சம்மேளனம் ஆகியன  இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தன.

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். பிராந்தியத்தின் பொருளாதாரம், கைத்தொழில் மற்றும் உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சி வேகம், தற்போதைய சூழலில் தெற்காசிய நாடுகளின் வர்த்தக துறைகளின் மூலோபாயங்கள் என்பன குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

மூன்று அமர்வுகளாக இடம் பெற்ற இம்மாநாட்டின் பிரதம உரையினை வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் நிகழ்த்தினார்.

சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் சீல் கான்த் சர்மா, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கோசல விக்ரமநாயக்க, சார்க் வர்த்தக சம்மேளன தலைவர் அன்சுல் ஹக்,பிராந்திய பணிப்பாளர் சைக் பிரயிட் உட்பட பலரும் உரையாற்றினர்.

 

 

alt

alt

alt

alt
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .