2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளின் மனு விசாரணைக்கு ஏற்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவேளையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் 13 பேர் தாக்கல் செய்த உரிமை மீறல் மனு இன்று வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிபதிகள் சலீம் மன்சூர், பி.ஏ.ரட்நாயக்க, எஸ்.ஐ.இமாம் ஆகியோரடங்கிய குழு இந்த மனுவை ஏற்றுக்கொண்டது. எல்.எம்.ஆர்.புஸ்பசிறி, எஸ்.டி.ஜி.தர்மசிறி, டி.எம்.ஆர்.பண்டா, ஜி.டபிள்யூ.ஜரட்ன, பி.டி.ஏ.றோகன், ஆர்.எம்.ஆரியரத்ன, பி.எச்.வசந்த, ஜி.எம்.ஏ.பண்டா, எம்.ஜி.டொனால்ட், எச்.பி.டி.எஸ்.பத்திரண, எச்.டி.றொஷான் ஆகியோர் தற்போது இரகசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமது பிரசார பயணத்தின் போது கொக்கரல்ல பகுதியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த சமயம் பிரசன்ன விக்கிரமசூரிய என்பவர் அடியாட்களுடன் வந்து தம்மை சூழ்ந்து பிடித்து கடத்திச் சென்றனர் என்றும் பின்னர் தம்மை கொக்கரல்ல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தாம் இப்போது இரகசிய பொலிஸாரினால் அரசாங்கத்துக்கு எதிராக சதி வேளையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .