2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவேன் : சி.வை.பி. ராம்

Super User   / 2011 ஜனவரி 11 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் நடத்தப்படும்போது அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர முதல்வர் வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி. ராம், தமிழ் மிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.

'கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட விரும்பியபோதிலும் எனது பெயர் கடைசி நேரத்தில் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

அவ்வேளையில் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக நான் நியமிக்கப்படுவேன் என கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் உறுதியளித்திருந்தார். அதன்படி நான் இப்பதவிக்குப் போட்டியிடுவேன். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்' என ராம் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • David Kumaradas Wednesday, 12 January 2011 07:35 PM

    " ஜெயவேவா "

    Reply : 0       0

    xlntgson Friday, 14 January 2011 09:24 PM

    உத்தேச கொழும்பு அபிவிருத்தி அதிகார சபையில் மேயருக்கு என்ன அதிகாரம் இருக்கும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X