2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

Super User   / 2011 ஜனவரி 20 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சிஹல உறுமய கட்சியினர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சி.வை.பி. ராம் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எமது நாட்டில் பௌத்த மக்கள் அதிகளவில் வாழ்கின்ற போதிலும், பன்னெடுங்காலமாக இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், அனைத்துப் பகுதிகளிலும் தமது வழிபாட்டுத் தலங்களை அமைத்து மதவழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஒரு நாடு, ஒரே மக்கள் என்ற குறிக்கோளுடன் செயற்படுவதாக கூறிக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான சிஹல உறுமயவின் செயற்பாடு மத நல்லிணக்கத்துக்குப் பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும்.

அதே நேரம் 'இந்ந நாடு பௌத்த மக்களை பெருமளவில் கொண்ட பௌத்த நாடு என்ற பேதிலும் ஏனைய இன மதங்களை பின்பற்றும் மக்களை அலட்சிப் படுத்த முடியாது. முடியாது. அவர்களை கௌரவப்படுத்த வேண்டும். இதனையயே புத்தபிரான் வலியுறுத்தியுள்ளார்' என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.

பிரதமர் டி.எம். ஜயரட்னவின் இந்த நடவடிக்கையை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைச்சர்கள், பிரதியமைச்சர்களும் பின்பற்ற வேண்டும்.

மதம் என்பது அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கம், ஐக்கியம், ஒழுக்கவியல் என்ற நற்பண்புகளையே உருவாக்க வேண்டும். அதனை விடுத்து இன, மத, குரோதங்களை தூண்டி எமது நாட்டில் மீண்டும் வன்முறை அரசியல் கலாசாரத்தை தூண்ட இடமளிக்கக்கூடாது என்பதை சிஹல உறுமய கட்சியினருக்கு அரசாங்கம் வலியுறுத்திக் கூற வேண்டும்.


You May Also Like

  Comments - 0

  • David Kumaradas Friday, 21 January 2011 11:31 PM

    இன ஒற்றுமையை பாதுகாக்க குரல் கொடுக்கும் UNGALUKU ENGAL NANDRIUM VANNAKKAMUM.

    Reply : 0       0

    xlntgson Sunday, 23 January 2011 08:33 PM

    இனஒற்றுமைக்கு அரசியல் எவ்வளவு பங்களிப்பு செய்யும் என்பதற்கு முன்னால் ஒவ்வொருவரும் இதய சுத்தியாக- வியாபார நோக்கம் எதுவுமில்லாமல்- எத்தனை மாற்று இன நண்பர்களை கொண்டிருக்கின்றோம் என்று சிந்திக்க வேண்டும்!
    அவ்வாறானவர்களை தன்னினத்தில் கூட கொண்டிராதவர்கள் இருக்கும் போது சிறிது பழகினால் கூட கைமாற்று வாங்கி திருப்பி கொடுக்காதிருக்கும் நண்பர்களை கொண்ட நாட்டில் கலப்பு திருமணங்கள் வெற்றி அளிக்கும் என்று எண்ண இடமில்லை.
    அரசு கலப்பு திருமணங்களின் மூலம் இன ஒற்றுமையை கொண்டு வர முயற்சிக்கலாம் ஆனால் வெற்றிபெரும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .