2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தொழிற்பயிற்சி பெறும் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டுப் பயிற்சியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு கொரிய அரசு

Super User   / 2011 ஜூன் 23 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந் நாட்டின் தொழிற் பயிற்சியினை அபிவிருத்தி செய்வதற்காக கொரியா அரசாங்கம் புதிய திட்டங்களை முன்வைத்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் ஒருகொடவத்த தொழில் பயிற்சி நிலையம், கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரி ஆகியன அபிவிருத்தி செய்யப்படுவதோடு புதிதாக திருகோணமலையில் மாகாண தொழில் பயிற்சி நிலையம், பாசிக்குடா தொழில்நுட்பக் கல்லூரி, சேருநுவர கிராமிய தொழில் பயிற்சி நிலையங்கள் என்பன ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் கொரிய தூதுவர் எச்.இ. ஜொங்க் மூஞ்சோயுடன் அமைச்சில் நடத்திய கலந்துரையாடலின் போது இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

கொரியா அரசாங்கத்திலுள்ள கொய்கா (முழுஐஊயு) அரச சார்பற்ற நிறுவனம் மூலம் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக ஒத்துழைப்பைக் கொடுப்பதற்கும் கொரிய தூதுவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு மேலாக, வெளிநாட்டில் பயிற்சி பெறும் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும் கொரிய அரசு தீர்மானித்துள்ளதென்றும் கொரியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2011 ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அதில் வேலைப் பணிகள் ஆரம்பமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் மாத்தறை தொழில்நுட்பக் கல்லூரி  உயர் மட்டத்திற்கு அபிவிருத்தி செய்வதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு கொரிய அரசு சம்மதித்துள்ளது. இந் நாட்டின் தொழில் பயிற்சியினை அபிவிருத்தி செய்வதற்காக நம் நாடு நிரந்தர ஒத்துழைப்பை கொடுக்கும் என்றும் கொரிய தூதுவர் எச்.இ. ஜொங்க் மூஞ்சோய் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, "ஆசியாவின் ஆச்சரியத்துக்குச் செல்லும் பாதையில் தொழில் பயிற்சிக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது.  இந்தத் துறை கொடுத்த அமைச்சராக ஜனாதிபதி என்னை நியமித்தது என்மேல் நம்பிக்கை வைத்தது தான். நான் இந்தத் துறையை பொறுப்பெடுத்து தற்போது 13 மாத மாதங்களே ஆகின்றன. இந்தக் காலத்திற்குள் பழைய முறைகளுக்கு மாறாக இக்காலத்திற்கு முக்கியமான புது தொழில்நுட்ப பாடநெறிகள் ஆரம்பித்தேன்.

தொழில்நுட்பம், தொழிற் பயிற்சிக்கு மிக முக்கியமானது. நம் நாட்டில் ஊழியர்கள் பெரும்பாலோர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பயிற்சி பெற்ற ஊழியர்கள் அல்லர் மிக விரைவில் அதை பயிற்சி பெற்ற படையணியாக மாற்றுவது என் நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .