2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பேஷியல் கிறீம் விஷமாகியதால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கால்வாய்க்கு அருகில் எறிந்த அழகுசிசிச்சை நிலை

Super User   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது வாடிக்கையாளரான சங்கீத ஆசிரியை ஒருவரின் முகத்தில் பூசிய கிறீம் ஒன்று விசமாகி அந்த ஆசிரியை இறந்ததையடுத்து அவரின் சடலத்தை அழகு சிகிச்சை நிலையத்தின் (பியூட்டி பார்லர்) உரிமையாளர் நீர்கொழும்பிலுள்ள கால்வாயொன்றுககு அருகில் வீசியுள்ளமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பிலுள்ள பாடசாலையொன்றில் பணியாற்றிய 34 வயதான வசந்த அமரதுங்க எனும் இந்த ஆசிரியை, நீர்கொழும்பு கொச்சிக்கடையிலுள்ள தனது வீட்டிலிருந்து செப்டெம்பர் 24 ஆம் திகதி வெளியே சென்றபின் காணாமல் போனார். மறுநாள் அவரின் சடலம் நீர்கொழும்பு கனல்வீதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸார் நடத்திய விசாரணைகள் மூலம், இந்த ஆசிரியை நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள அழகுசிகிச்சை நிலையமொன்றுக்கு பேஷியல் செய்துகொள்வதற்காக சென்றமை தெரியவந்தது.

அந்த அழகு சிகிச்சை நிலையத்தில்  அவருக்கு முகத்தில் பூசப்பட்ட கிறீமொன்று விஷமாகி அவர் இறந்ததையடுத்து அவரின் சடலத்தை அழகு சிகிச்சை நிலையத்தின் உரிமையாளர் தனது கணவரின் உதவியுடன் கால்வாய்க்கு அருகில் கிடத்திவிட்டு சென்றமையும் பொலிஸார் நடத்திய விசாரணைகள் மூலம் தெரியவந்ததுள்ளது.

அழகு சிகிச்சை நிலையத்தின் உரிமையாளரும் அவரின் கணவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (சண்டே டைம்ஸ்)
 


You May Also Like

  Comments - 0

  • Hot water Sunday, 09 October 2011 10:58 PM

    யார் வேண்டுமானாலும் அழகு சிகிச்சை வர்த்தகத்தை ஆரம்பித்துவிடலாமா? இதற்கும் விஞ்ஞான மருத்துவ அறிவு, அனுபவம் வேண்டும்.

    Reply : 0       0

    Hameed faleel Sunday, 09 October 2011 10:59 PM

    அழகு ஆபத்தானது என்பது இதைதானா?

    Reply : 0       0

    anbhoo Sunday, 09 October 2011 11:10 PM

    இதே மாதிரிதான் வைத்தியர்களும் செய்வதுண்டு ......... Mr Hotwater.

    Reply : 0       0

    ibnuaboo Monday, 10 October 2011 02:16 AM

    இது தங்கள் அழகாய் இருக்க கண்ட கண்ட அழகு சாதனங்கள் பூசி மெழுகும் பெண்களுக்கு நல்ல எச்சரிக்கை . தலைக்கு டை பூசிய பெண் டை நஞ்சாகி மண்டை ஊடாக அது இருதயத்துக்கு ஊடுருவி மரணித்த சம்பவம் நம் நாட்டில்தான் முன்னர் நடந்தது.

    Reply : 0       0

    Birdeye Monday, 10 October 2011 03:58 AM

    There should be a legal license to conduct like these beauty culture business. Because there are thousands of beautician doing business without any proper knowledge of human body and skin and it is good lesson learning to nasty customers.

    Reply : 0       0

    Rifai Tuesday, 11 October 2011 07:46 PM

    Beauty wants to live, not to die.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X