2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையில் கொரிய திரைப்பட விழா 2011

Kogilavani   / 2011 நவம்பர் 23 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)

 

கொரிய நாட்டு தூதரகம், மற்றும் இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் இணைந்து நடத்தம் 'கொரிய நாட்டு திரைப்படவிழா 2011' எதிர்வரும் 5ஆம் திகதி தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பமாகவுள்ளது. இத்திரைப்பட விழாவிற்கான அனுமதி சீட்டு இலவசமாகும். முதல் நாள் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டும் வரவேற்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படவிழா குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அண்மையில் தேசிய திரைப்பட  கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது.  

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குமார் அபேசிங்க, கொரிய நாட்டு தூதுவர் ஜொங்மூன் ஜோய், செயலாளர் ஹான் சாங் சு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தலைவர் குமார் அபேசிங்க தெரிவிக்கையில்,

வெளிநாட்டவர்களின் நட்புறவு, அவர்களின் பாரம்பரிய கலாசார பண்பாட்டு அறிதல்கள், திரைப்படத்துறை குறித்த அறிவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் பல்வேறு முயற்சிகளை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளது. அம்முயற்சியின் பயணாக ஜப்பான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் திரைப்பட விழா அண்மைக் காலங்களில் இலங்கையில் நடைபெற்றது.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் அனைத்து விடயங்களையும் அடுத்த நாள் ஊடகங்களில் காணமுடியும். அதனால்தான் இலங்கையின் சினிமாத்துறை பல்வேறு வளர்ச்சி படிநிலைகளை கடந்து நிற்கின்றது. இன்று தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் திரையிடுவதற்காக திரைப்படங்கள் வரிசையில் காத்து நிற்கின்றன. இவை அனைத்திற்கும் ஊடகங்களே முக்கிய காரணம்.

இலங்கை கொரிய நாட்டுடன் அனைத்துவிடயங்களிலும் நட்புறவை பேணி வருகின்றது. அந்த வகையில் இலங்கையில் முதன்முறையாக கொரிய நாட்டு திரைப்படவிழா நடைபெறவுள்ளது.

கொரிய நாட்டினர் கலைத்துறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கலைக்காக வருடம் முழுவதிலுமான செயற்திட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக நவம்பர், டிசெம்பர் மாதங்களில் இவ்வாறான திரைப்பட விழாக்கள் இடம்பெறுகின்றன. இம்முறை அவர்கள் இலங்கையில் முதன்முறையாக திரைப்படவிழாவை நடத்த உள்ளனர். இத்திரைப்படவிழா தொடர்ந்து 5 தினங்கள் நடைபெறவுள்ளன.

5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இத்திரைப்படவிழாவில் விளையாட்டு, நாடகம், காதலுணர்வு, நகைச்சுவை, திகிலனுபவம் என அனைத்து ரசனை மட்டத்தினருக்குமான 5 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

'லிப்டிங் கிங் கொங் (விளையாட்டு 2009)', ' ஹைவே ஸ்டார் (நகைச்சுவை 2007)', 'கிறிஸ்ட்மஸ் இன் ஓகஸ்ட் (ரொமான்டிக் 1998)' , 'மெமன்டோ மோரி (திகில் 1999)', 'ஹெபி லைப் (நாடகம் 2007)' ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X