2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எதிர்க்கட்சி கூட்டமைப்பின் கலந்துரையாடல்

Super User   / 2012 நவம்பர் 11 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

13ஆவது திருத்தத்திற்கு பதிலாக  19ஆவது திருத்தமொன்றை  கொண்டுவரும் அரசாங்கத்தின் திட்டம் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர  முன்னணியுடனான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் தலைமையிலான குழுவினரின் பேச்சுவார்த்தை ஆகியவை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித், எதிரணி கூட்டமைப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"13ஆவது திருத்தத்திற்கு பதிலாக  19ஆம் திருத்தமொன்றை  கொண்டுவரும் அரசாங்கத்தின் திட்டம் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர  முன்னணியுடனான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் தலைமையிலான குழுவினரின் பேச்சுவார்த்தை ஆகியவை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித், எதிரணி கூட்டமைப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகிய பரபரப்பான நிகழ்வுகளுக்கு மத்தியில் 19ஆம் திருத்தம் என்ற ஒரு முயற்சி சத்தமில்லாமல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏனைய விடயங்களை விட இன்றைய தினத்தில் தமிழ் மக்களுக்கு இதுவே மிகவும் முக்கியமான விவகாரமாகும். இன்றைய கூட்டத்தில் இது சம்பந்தமாக ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினேன்.

இதற்கு விமல் வீரவன்சவுடனான கலந்துரையாடலின் போது அவர்,  பதின்மூன்றாம் திருத்தத்தை அகற்ற வேண்டும் என்ற கருத்தையும் அது எமது நாட்டின் மீது திணிக்கப்பட்ட சட்டம் என்றும் வலியுறுத்தினார். 

ஐ.தே.க பதின்மூன்றை முழுமையாக அகற்ற உடன்படாது என்றும் ஆனால்  அது திருத்தப்படும்  அவசியத்தை ஐ.தே.க ஏற்றுகொள்கிறது என்றும்  அத்தகைய திருத்தங்கள் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய வேண்டும் என்றும் தாம் அவருக்கு தெரிவித்தாக ரணில் எம்மிடம் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் ஐ.தே.கவின் மாநாட்டில் தமது கட்சியின் கொள்கை பிரகடனம் வெளியிடப்படும் எனவும் அதில் 13ஆவது திருத்தம், கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகள் மற்றும் சமூக ஜனநாயக பொருளாதார அமைவு முறை ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் புதிய ஒரு அரசியலமைப்பு பற்றியும் தாம் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பதின்மூன்று என்பது ஒரு ஆரம்பம். அதிலிருந்து முன்னோக்கி செல்லும் படித்தான் கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசும் கூறுகிறது. பதின்மூன்று திருத்தப்படும் போது அல்லது ரணிலின் உத்தேச  புது அரசியலமைப்பு யோசனைகளின் போது பதின்மூன்றிலிருந்து முன்னோக்கி போக வேண்டுமே தவிர இருப்பதையும் வெட்டி குறைக்க  கூடாது. அவாறான திட்டங்களுக்கு ஐ.தே.க உடன்படக்கூடாது என நான் தெரிவித்தேன்.

எனது கருத்துக்கு சிறிதுங்க, விக்கிரமபாகு ஆகியோரும் தமது உடன்பாட்டை தெரிவித்தார்கள். இது தொடர்பில், எதிரணி கூட்டமைப்புக்கு வெளியில் நாம் அமைத்துள்ள 'அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற அமைப்பு அவதானமாக இருக்கும்.

விமல் வீரவன்ச சொல்லுவதை போல் பதிமூன்றாம் திருத்தம் திடீரென அடாவடியாக கொண்டுவரப்பட்டது அல்ல. அதற்கு ஒரு பேச்சுவார்த்தை  வரலாறு இருக்கிறது. எனவே, பதின்மூன்றாம் திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச நீதிமன்றத்தை நாடினால் அதற்கு உரிய சட்ட ரீதியான பதிலை  நாம் அவருக்கு வழங்குவோம். 

முழு நாட்டையும் இனவாத அடிப்படையில் வழி நடத்தி செல்ல எத்தனிக்கும் விமல் வீரவன்சவின் முயற்சிகளை, ஜனநாயக மக்கள் முன்னணி கடுமையாக எதிர்க்கும். நமது முயற்சிகளுக்கு நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாம் எமது ஏனைய கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து இனவாதிகளுக்கு எதிராக நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்".  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .