2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜே.வி.பி அங்கத்தவர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாரூக் தாஜுதீன்)

முன்னணி சோஷலிசக் கட்சி அங்கத்தவரை தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றதாக கருவாத்தோட்டம் பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று அங்கத்தவர்கள் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வீரர் தினத்துக்கான சுவரொட்டிகளை கடந்த 11ஆம் திகதி இன்னுமொருவருடன் இணைந்து ஒட்டிக்கொண்டிருந்த வீரசிங்க என்பவரை, சந்தேகநபர்களான சுமித், விஜேரத்ன, நிலந்த குமார ஆகியோர் தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், முதலாவது சந்தேகநபர் கொழும்பு மாநகரசபை அங்கத்தவர் எனவும் அவர் மக்கள் விடுதலை முன்னணியினால் விகாரமாதேவி பூங்காவில் நடத்தப்படவுள்ள விழாவுக்கு பொறுப்பாக உள்ளவரெனவும் இந்த விழா சிறப்பாக நடப்பதைத் தடுக்கவே முறைப்பாட்டாளர் இவ்வாறானதொரு முறைப்பாட்டைச் செய்துள்ளார் எனவும் கூறினார்.

அத்துடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்தேகநபர்கள் நவம்பர் 11ஆம் திகதி அவிசாவளையில் இருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா ஒரு மில்லியன் ரூபா ஆள்பிணை மற்றும் இரண்டு சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் வழக்கை பெப்ரவரி 18க்கு ஒத்திவைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .