2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கம்பஹா பொது நூலகத்தில் அல்குர்ஆன் பிரதிகளின் கண்காட்சி

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்
 
கம்பஹா பொது நூலகத்தில் இடம்பெறும் தேசிய கல்விப் புத்தகக் கண்காட்சியில் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் அல்குர்ஆன் பிரதிகளின் கண்காட்சியும் இடம்பெறுகிறது.
 
கடந்த புதன்கிழமை (4-12-2013) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8-12-2013) வரை இந்த புத்தகக் கண்காட்சி இடம்பெறுகிறது. கம்பஹா மேயர் எரங்க சேனாநாயக்க கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
 
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தினால் 75 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள அல்குர்அன் மொழி பிரதிகளில் 45 மொழி பெயர்ப்புக்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
உலக நாடுகளின் காங்கிரஸின் மூதவை உறுப்பினரும், ஐக்கிய ராஜ்யத்தின் துவாலு தீவின் தூதரக ஆலோசகரும், 2010ஆம் ஆண்டின் மனித உரிமைக்கான மாமனிதர் விருது பெற்றவரும், பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் (OBE) விருது பெற்றவருமான கலாநிதி இப்திகார் அயாஸ் சாஹிப் அலகுர்ஆன் கண்காட்சியை பார்வையிடுவதையும், மௌலவி ஏ.பி.முஸ்தாக் அஹ்மத் கம்பஹா பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பு செய்வதையும், கம்பஹா மேயர் கண்காட்சியை திறந்து வைப்பதையும் பின்னர் அல்குர்ஆன் கண்காட்சி பிரிவிற்கு வந்து பார்வையிடுவதையும், நிகழ்வின் ஆரம்பத்தில் பிரார்த்தனை இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .