2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தந்தை செல்வா நினைவுப் பேருரை

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 37ஆவது நினைவு தினம் எதிர்வரும் 26ஆம் திகதி சனியன்றாகும். அவரின் நினைவு தினத்தன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை வருடாந்தம் நடத்தும் நினைவுப் பேருரை வரிசையில், இம்முறை அத்தினத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தின 'தேசிய பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே' என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்துவார்.

வழமை போல தந்தையின் நினைவு தினமான ஏப்ரல் 26ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும்.

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ணவை சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அறிமுகம் செய்வதோடு, அவரின் ஆங்கில உரையின் தொகுப்பைத் தமிழிலும் தருவார்.

இடதுசாரிப் போக்குக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண மதிப்பார்ந்த சட்ட விற்பன்னர். அரசமைப்பு விவகார அமைச்சின் ஆலோசகராக இருந்தவர். அரசமைப்புக் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர். இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் தனித்துவமான கருத்துகளை வெளிப்படுத்தவல்ல ஒரு கல்விமான் என்பது குறிப்பித்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .