2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கழிவு உலோகங்களின் ஊடான தொழிற்துறை நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஊடாக கழிவு உலோகங்களை தொழிற்துறைசார்ந்த உற்பத்தியாளர்களுக்கு வழங்கி தொழிற்துறை நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலான மீளாய்வு கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு மொரட்டுவப் பகுதியில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையில் மேற்படி கலந்துரையாடல் இன்றைய தினம் (02) இடம்பெற்றது.

இதன்போது கழிவு உலோகங்கள் ஊடான உற்பத்திகள் தொடர்பாக இவ்வாண்டின் முதல் ஐந்து மாத காலப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்துறைசார்ந்த நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, நாடளாவிய ரீதியிலுள்ள கழிவு உலோகங்கள் ஊடான உற்பத்தி தொழிற்சாலைகளில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகளின் விபரங்களையும் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் அவற்றின் உண்மைத்தன்மைகள் தொடர்பில் நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் துறைசார்ந்தோருக்கு பணிப்பு விடுத்தார்.
அத்துடன், குறித்த தொழிற்துறையாளர்களின் கழிவு உலோகங்களைச் சார்ந்த மூலப்பொருட்களின் தேவைகள் உற்பத்திகள் அவற்றின் சந்தைவாய்ப்புக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்திய அதேவேளை, கழிவு உலோகங்களை கைத்தொழில் அபிவிருத்தி சபை பெற்றுக் கொள்ளும் வகையில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுடன் கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் மாதந்தோறும் தேவைப்படுகின்ற மூலப்பொருட்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், யாழ்.மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் காட்சிக்கூடமொன்றை அமைத்து அங்கு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்வது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அத்துடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான அலுவலகங்களை நிறுவி அவற்றின் ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தொழிற்துறை நடவடிக்கைகளையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

முக்கியமாக அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் மூலம் கிடைக்கப்பெறுகின்ற கழிவுப்பொருட்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அவற்றை தொழிற்துறைசார்ந்தோருக்கு நியாயவிலையில் வழங்குவது தொடர்பிலும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் கண்காட்சி நினைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவர் நினைவுப்பரிசிலை வழங்கி வைத்தார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், அமைச்சின் மேலதிக செயலாளர் சுசந்த டி சில்வா, அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி புஸ்பா குணவர்த்தன கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பதில்பணிப்பாளர் ரட்னம்மலால உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X