2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பு நகரில் கண்காணிப்பு கமெராக்களை செயற்படுத்தும் திட்டம் 29 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

Super User   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

கொழும்பு நகர வீதிகளில் கண்காணிப்பு கமெராக்களை செயற்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

28 இடங்களில் மொத்தமாக 108 கண்காணிப்பு கமெராக்களை பொருத்தும் நடவடிக்கை பூர்த்தியாகியுள்ளது. விசேடபொலிஸ் பிரிவொன்றினால் இக்கமெராக்கள் கண்காணிக்கப்படும்.

குற்றச்செயல்களை முறியடிப்பதற்கும் போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் இக்கமெராக்கள் உதவும் என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இக்கமெராக்களை பொருத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சு 35 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .