2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இ.போ.சபை பஸ் மீது தாக்குதல்

Editorial   / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

புது வருடத்தையொட்டி, வென்னப்புவ இ.போ.ச டிப்போவினால், நீர்கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிய சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் ஒன்றின் மீது, நேற்று (19), வைக்கால தோப்பு பிரதேசத்தில் வைத்து, தாக்குதல் மேற்கொண்டு சேதப்படுத்தியதோடு, அதன் சாரதி மற்றும் நடத்துனரையும் தாக்கிய சம்பவம் தொடர்பில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலில் காயமடைந்த பஸ் சாரதியும், நடத்துனரும் மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பஸ், குருநாகல் திசையில் பயணித்துக் கொளண்டிருந்த போது, வைக்கால தோப்பு பிரதேசத்தில்,  அதே திசையில் பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று, இ.போ.சபைக்குரிய பஸ்ஸை முந்திச் சென்று, வீதியை மறித்து நிறுத்திவிட்டு, அந்த பஸ்ஸின் கெமராவைச் சேதப்படுத்தியுள்ளதோடு, அதன் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலின் பின்னர், நடத்துனரிடமிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான டிக்கட் இயந்திரத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு, தாக்குதலை மேற்கொண்டோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின்  சாரதி மற்றும் நடத்துனரைக் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எல்.பி.அபேரத்னவின் உத்தரவில், உப பொலிஸ் பரிசோதகர் சரத் பிந்துவின் தலைமையிலான குழுவினர்,இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .