2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

காணி விலை அதிகரிப்பு

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டக் காணிகளின் விலை 12.6 சதவீத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வௌியிடப்பட்ட காணி விலைச்சுடெண்ணிலேயே, இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அசையா சொத்துகள் பிரிவின் மேம்பாட்டைக் கண்காணிப்பதற்காக, இலங்கை மத்திய வங்கியால் பல சுட்டெண்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அந்த வகையில், 1998ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில், காணிகள் தொடர்பான விலைச்சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுட்டெண்கள் தயாரிப்பில், மதிப்பீட்டுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட கொழும்பு மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையிலான 50 பிரதேசங்களின் காணி விலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 இதன்போது, காணிப் பயன்பாடு குறித்த விடயங்களைக் கவனத்திற் கொண்டு, இருப்பிடம் அல்லாத வர்த்தகம் மற்றும் கைத்தொழிற்றுறைக் காணிகள் தொடர்பில் 3 சுட்டெண்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் காணிகள் தொடர்பான விலை, அண்மையில் அதிகரித்துள்ளமையை வெளிப்படுத்தியுள்ள இக்காணி விலைச்சுட்டெண்ணில், 2017ஆம் ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12.6 சதவீத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .