2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரணை பிரதேசத்தில், கடந்த சனிக்கிழமை மாலை, விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்ட பாதாள உலக சந்தேகநபர்களில் இருவரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், நீர்கொழும்பு பதில் நீதவான் கருணா ஜீவ கமகே குணதாச முன்னிலையில், நேற்று  (13) இரவு 9.30 மணியளவில் ஆஜர்செய்யப்பட்ட போதே, இந்த அனுமதியை, நீதவான் வழங்கினார்.

3ஆம் மற்றும் 4ஆம் சந்தேகநபர்களான வெலமெத கெதர அருணசாந்த, கங்காணம்லாகே தரிந்து மதூச ஆகியோரே, இவ்வாறு நீதவானின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 1ஆம், 2ஆம் சந்தேகநபர்களான ரங்க ஹொட்டிகே வஜர குமார, பத்தரண முதியான்சலாகே சமித் குமார ஜயதுங்க ஆகியோர், சம்பவத்தில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ராகமை வைத்தயசாலை ஆகியவற்றில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால், அவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவில்லை.

ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, ராகமை வைத்தியசாலைக்கு நீதவான் சென்றார்.

மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபரை விசாரணை செய்வதற்காக, கொழும்பு நீதவானிடம் அவரை ஆஜர்படுத்துமாறு, பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X