2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துலாஞ்சலிக்கு அன்பளிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேவல கல்வி வலயத்தின் பஹல திக்கல ஆரம்ப பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ள பி.டி.துலாஞ்சலி மதுமாலி பிரேமரத்ன என்ற மாணவி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி அலுவலத்தில் வைத்து, இன்று (10) முற்பகல் சந்தித்தார்.

தந்தையை இழந்து உரிய வீட்டு வசதியுமின்றி மிகுந்த பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் துலாஞ்சலி மதுமாலி, 168 புள்ளிகளைப்பெற்று இம்முறை 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

மாணவியின் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி, அவரது உயர்கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும்வரை மாதாந்தம் 3000 ரூபாயை வழங்குவதாக உறுதியளித்தார்.

துலாஞ்சலி மதுமாலிக்கு புதிய வீடொன்றை அமைத்துக்கொடுக்கவுள்ளதாக, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

மாணவி துலாஞ்சலி மதுமாலிக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கினார்.

பஹல திக்கல ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்கள் ஆகின்றன. தற்போது பாடாசலையில் 96 மாணவர்கள் உள்ளனர். இப்பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரேயொரு மாணவி பி.டி.துலாஞ்சலி மதுமாலி என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .