2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ரூ.5.4 மில். பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

Editorial   / 2017 ஜூன் 19 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளைப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில், 540 கிராம் ஹெரோயினுடன் 33 வயதுடைய நப​ரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஹெரோய்ன், 5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினரால், பொரளை – றனகல மாவத்​தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், பொரளையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெ​ன, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .