2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் அமுதனின் 'அக்குரோணி' கவிதைநூல் வெளியீடு

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மன்னார் அமுதனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'அக்குரோணி' வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு மருத்துவ கலாநிதி எம்.கே.முருகானந்தன் தலைமை தாங்கினார். வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம ஆசிரியர் வீ.தேவராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

மங்கல விளக்கேற்றுகையுடன் ஆரம்பித்த 'அக்குரோணி' கவிதை நூல் வெளியீட்டு விழாவின் வரவேற்புரையை கொழும்பு திருமறை கலாமன்றத்தின் இணைப்பாளர் அம்புறோஸ் பீற்றர் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மன்னார் அமுதனின் மனைவி மைதிலி – தமிழ்தாய் வாழ்த்து இசைத்தார். சக்தி பண்பலைகளின் தயாரிப்பாளர் ஆ.ராஜ்மோகன் நூல் அறிமுகத்தினை செய்தார். மூத்த கவிஞர் அஷ்ரப் சிகாப்தீன் - அக்குரோணி நூலின் நயவுரையினை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன.

முதற்பிரதியினை வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம ஆசிரியர் வீ.தேவராஜிடமிருந்து புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொண்டார். Pix: Kithsri De Mel


You May Also Like

  Comments - 0

  • எம்.கே.முருகானந்தன் Tuesday, 05 April 2011 12:06 PM

    அழகான படங்களுடன் செய்தி வெளியிட்டதற்கு நன்றி

    Reply : 0       0

    நேமிகாந்த் Tuesday, 05 April 2011 03:54 PM

    வாழ்த்துக்கள். நண்பா............. உங்கள் பணி மென் மேலும் சிறப்பாக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்..........

    Reply : 0       0

    மன்னார் அமுதன் Tuesday, 05 April 2011 08:37 PM

    உங்கள் வருகைக்கும், சேவைக்கும் என் மன்மார்ந்த நன்றிகள் தோழர்களே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .