2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அதிபர்களுக்கு பதவி உயர்வு வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அதிபர் தடைதாண்டல் பரீட்சைக்குச் செல்ல முடியாமல் பதவி உயர்வுகளைப் பெறாத அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது,

இது தொடர்பில் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அதிபர் சேவைத் தரம் 1 கிடைக்க வேண்டிய பல அதிபர்கள் யுத்த காலங்களில் தடைதாண்டல் பரீட்சைக்கு செல்ல முடியாததால் அவர்களுக்கான பதவி உயர்வு இதுவரை வழங்கப்படாமல் இருந்தது.

இத்தகைய நிலையை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மத்திய கல்வி அமைச்சுக்குக் கொண்டு சென்று, யுத்த காலங்களில் குறித்த அதிபர்கள் தடைதாண்டல் பரீட்சைக்கு கொழும்புக் செல்ல முடியாததால் அவர்களுக்கான தடைதாண்டல் காலங்களுக்கு விலக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தது.

இதைவிட இவர்களில் பலர் வயது முதிர்ந்தவர்களாகவும், அதிபர் சேவைத்தரம் 2 இல் நீண்டகாலம் கடமையில் உள்ளவர்களாகவும் உள்ளதால், அவர்களுக்கான தடைதாண்டல் பரீட்சையில் விலக்களித்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அதற்கமைய 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை விலக்களித்து அதிபர் சேவைத்தரம் 1 வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X