2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இராணுவ அதிகாரி விடுதலை: கஜேந்திரன் குற்றச்சாட்டு

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பில் விடுதலை செய்ததன் ஊடாக தமிழர்களை படுகொலை செய்பவர்களை நாம் விடுதலை செய்வோம் என்ற செய்தியை இலங்கை இராணுவத்துக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார்” என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்

யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தான் ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள இராணுவத்தினரை விடுவிப்போம் என தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். அதேபோல் அண்மையில் 34 இராணுவ அதிகாரிகளை சிறையில் இருந்து பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ அதிகாரியை மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.

“ஜனாதிபதியின் இந்த செயற்பாடு எமக்கு அதிர்ச்சியை தரவில்லை. ஏனெனில் சிங்களத் தலைவர்களின் மனநிலையில் எப்பபோதும் மாற்றம் ஏற்படாது. இதனை நாம் ஆரமப்த்தில் இருந்தே கூறி வருகின்றோம்.

“இந்தச் செயற்பாடானது, தமிழர்களைப் படுகொலை செய்பவர்களை நாம் விடுதலை செய்வோம் என்ற செய்தியை இராணுவத்துக்கு வழங்கியுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .