2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இருண்ட மாதமாக பிரகடனப்படுத்த வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'மகளிர் தினமான இன்று முதல் இம்மாதம் முழுவதையும் இருண்ட மாதமாக இலங்கை மக்கள் பிரகடனப்படுத்த வேண்டும்' என அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண பெண்கள் மாற்றத்துக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு என்பன கோரிக்கை விடுத்துள்ளன.

மேற்படி இரண்டு அமைப்புக்களும் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் நேற்று பரமேஸ்வரா சந்தியில் நடைபெற்றது. இதன்போதே, அவ் அமைப்புகள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளன.
இது குறித்து அவ் அமைப்புகள் மேலும் கூறியதாவது,

'பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் உள்ளது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அற்றுப்போயுள்ளது.

இதனால் மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த மாதத்தை இருண்ட மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.

பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழவுகளும் ஆண்கள், பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களாக மாறவும் அனுமதிக்கமாட்டோம்.

இதனை வெளிக்காட்ட வீடுகள், வர்த்தக நிலையங்களில் இம்மாதம் முழுவதும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட வேண்டும். நாமும் கறுப்புப் பட்டிகளை அணிவோம்' என குறிப்பிட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .